First Certified Centre
Mobile No : +91 9787212777, 9787767777
    தமிழ்|English
சேவைகள்

பொதுவாக மற்றவர்களோடு பழகுதல் புதியவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது. ஒரு பொது விடத்தில் விமான நிலையம் பஸ் ஸ்டான்ட் ரயில்வே ஸ்டேஷன் உணவு விடுதி மளிகைக் கடை போன்ற இடங்களில் எவ்வாறு மற்றவர்களோடு உறவு ஏற்படுத்திக் கொள்வது போன்ற செயல்களும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய பிரச்சனை உள்ளன. (social intraction) இவர்களுடைய அடிப்படைப் பிரச்சினை என்றே சொல்லலாம். நான் கை குலுக்க முற்பட்டபோது ஒரு 8 வயது பையன் என் கையைத் தட்டி விட்டு ஓடி விட்டான். சில குழந்தைகள் தாயைக்கூடத் தொட அனுமதிப்பதில்லை 25 வயது இளைஞர் ஒரு பொதுக்கூட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பூன்கொத்தை தூக்கி எரிந்து விட்டார். இந்தச் சம்பவங்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் முக்கிய குறைபாடாகக் கருதப்படுகிறது.
கற்பனை திறன், எளிதில் மாற்றியோசிக்கக் கூடிய திறன் (imagination and flexible skills) இவர்களுக்கு கிடையாது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு செய்யுளுக்குள் புதைந்து கிடக்கும் கருத்தை புரிந்து கொள்வதில் சிரமப்படுகின்றனர். பழமொழிகள் idioms போன்றவற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தாலும் தோல்வியடைகின்றனர். "சூரியன் கிழக்கே உதிக்கிறது." என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். "எங்கள் ராஜ்யத்தில் சூரியன் மறைவதில்லை " என்ற கூற்றை அவர்கள் புரிந்து கொள்வது மிகவும் கடினம். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை போன்ற உறவுமுறைகளை உணர்ந்த போதிலும் நாம் இந்திய சமுதாயத்தில் உடன் ப்பிரவாதவர்களும் அண்ணா, தம்பி என்று விளிக்கும் போது அவர்களுக்கு குழப்பம் ஏற்படுகின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்னாள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கவிதையோ, ஓவியமோ, சிற்பமோ உருவாக்க முடியும் என்று யாராலும் கருதியிருக்க முடியாது இது எப்படி சாத்தியமாயிற்று இவர்களில் உலகம் போற்றக்கூடிய கலைஞர்கள் பற்றி இந்தக் கையேட்டின் இறுதியில் காணலாம்.
இந்த மூன்று குறைபாடுகள் (traid of impairment) தவிர வேறு சில குறைபாடுகளும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணலாம்
1) உணவு உன்னுவதிலில் பிரச்சனை, சாப்பிடக்கூடாத பொருட்களைச் சாப்பிடுதல் (உதாரணம் ) பேப்பர் பிளாஸ்டிக் அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உணவையே உண்ணுதல், தோசையைத் தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை.
2) தூக்கமின்மை, தூங்கும் நேரமும் மிகக் குறைவு
3) வலி உணராமை, சுவரில் இடித்துக்க் கொண்டலோ கீழே விழுந்து உடம்பில் காயம் ஏற்பட்டாலோ, அந்த வழியை உணராமல் இருப்பது.
4) எளிதில் ஒவ்வாமை
5) ஒரே செய்கையைத் திரும்பத்திரும்பச் செய்தல் (உம்) ஒரே ஒரு பொம்மையோடு விளையாடுதல்
6) மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமை, ஒரு பொருளைக் குறிப்பிட்ட இடத்திலிருந்து மாற்றினால் அவர்களுக்கு பிடிப்பதில்லை.
7) ஒரே இடத்தில் அமராமல் அங்கும்மிங்கும் ஓடுதல், அளவுக்கதிகமாக குதித்தல்.
8) சில வகையான சத்தங்களுக்கும் சுவைகளுக்கும், மணங்களுக்கும், அளவுக்கதிகமாக உணர்ச்சி வசப்படுதல். குக்கரின் விசில் ஒலி, மிக்சி, கிரைண்டர் இயங்கும் ஒலி, டெலிபோன் ஒலி, இவைகள் அவர்களைப் பாதிக்கின்றன.
9) Rocking உடம்பில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமை, நன்றாகக் கால்களைத் தரையில் ஊன்றி நிற்க இயலாததால் தங்கள் உடலையும் சில நேரங்களில் தலையையும் ஆட்டிக்கொண்டே இருத்தல்.


ஆட்டிசம் ஒரு வியாதியல்ல.இது ஒரு வளர்ச்சி குறைபாடு, மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற ஒரு வளர்ச்சிக் குறைபாடு குழந்தையின் சாதாரண வளர்ச்சியைப் பாதிக்கும் குறைபாடு இந்தக் குறைபாட்டைக் குழந்தை பிறந்த 18 மாதங்களிலேயே கண்டுபிடுத்து விடலாம். பெரும்பாலும் தாய்மார்கள் இந்தக் குறைபாட்டைக் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் குழந்தை மருத்துவரை அணுகுவதில்லை. இந்தக் குறைபாட்டைப் புறக்கணித்து விடுகின்றனர். அல்லது வீட்டிலுள்ள பெரியோர்களின் மூடநம்பிக்கைகளினால் மருத்துவரை அணுகாமல், வேறு விதமாக இந்தப் பிரச்சினையைக் கையாளுகின்றனர் (உம்) கோயில், மந்திரித்தல் போன்ற செய்கைகளின் மூலம் குணப்படுத்த முயலுகின்றனர்.
அடுத்தபக்கம் செல்க
Keywords :
OT Madurai ,   Speech Therpy Madurai ,   Ocupational therpy Madurai ,  Atism Madurai ,   Adhd Madurai ,   Multi therpy Madurai
முகப்பு | எங்களைப்பற்றி | சேவைகள் | படங்கள் | தொடர்புக்கு
Brightchildrenmtc 2013. All rights reserved, Designed by Infostech